செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு கடல்சார் கண்காணிப்பு விமானங்களை இலவசமாக வழங்கும் அமெரிக்கா

இரண்டு கடல்சார் கண்காணிப்பு விமானங்களை இலங்கை அரசாங்கத்துக்கு இலவசமாக வழங்க அமெரிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை விமானப்படை  21-02-2022.அன்று
 தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படை மூலம் இயக்கப்படும் வெளிநாட்டு இராணுவ விற்பனை ஒப்பந்தத்துக்கு அமையவே விமானங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் முதல் விமானம் 2022 இன் பிற்பகுதியில் அல்லது 2023 இன் முற்பகுதியில் விமானப்படைக்கு வழங்கப்படும் என விமானப்படை பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் வேண்டுகோளுக்கமைய, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் கடல்சார் கண்காணிப்பு திறனை வலுப்படுத்துவதற்காக 2 விமானங்களை விமானப்படைக்கு வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் 
குறிப்பிட்டார்.
டெக்ஸ்ட்ரான் ஏவியேஷன் தயாரித்த பீச்கிராஃப்ட் 360ஈஆர் இரட்டை-டர்போபிராப் விமானத்தை விமானப்படை கோரியிருந்தாகதத் 
தெரிவித்தார்.
இது அமெரிக்காவிலுள்ள ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு முகவரகம் ஆகியவற்றால் சான்றளிக்கப்பட்ட இலகுரக போக்குவரத்து விமானமாகும் என்றும் 
அவர் குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.