யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த குறித்த பெண் நேற்றைய தினம் மாவட்ட குற்றச்சாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் வியாபாரியிடம் போதைப் பொருள்
வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளரும் 28-03-2023-அன்று கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் எனவும் கைது செய்யப்பட்டோர் 17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
போதைப் பொருள் வியாபாரியான பெண் நீண்ட காலமாக போதை பொருள் விற்று வருகின்றமை தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டமை அடுத்து இந்த கைது
இடம்பெற்றுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக