சனி, 4 மார்ச், 2023

வீட்டுபிராணிகள் மூலம் இங்கிலாந்தில் பரவும் அபூர்வ நோய் மக்களுக்கு எச்சரிக்கை

இங்கிலாந்தில் செல்லப்பிராணிகள் மூலம் பரவும் அபூர்வ நோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  
இங்கிலாந்தில் முதல் முறையாக கடுமையான 
வலியுடன் கூடிய கொப்புளங்களை உருவாக்கும் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று பேருக்கு இந்த பூஞ்சை 
நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூனையின் உடலில் உருவாகும் இந்த நோய், கீறல் அல்லது பூனை கடி மூலம் மனிதர்களுக்கு பரவும் என்றும் பிரேசில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டுவரப்பட்ட பூனை மூலம் இந்த நோய் பரவியுள்ளது எனவும் இங்கிலாந்து மருத்துவத்துறை 
தெரிவித்துள்ளது. 
இந்த பூஞ்சை தொற்று எலும்புகளையும் மூட்டுகளையும் பாதிக்கலாம் என்றும் சிலருக்கு நுரையீரல் மற்றும் மைய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.