வியாழன், 23 மார்ச், 2023

நாட்டில் தலைப்பிறை எங்கும் தென்படாததனால் ரமழான் நோன்பு நாளை 24ஆரம்பிக்கப்படும்

ஹிஜ்ரி 1444 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டில் எங்கும் தென்படாததன் காரணமாக, ரமழான் நோன்பு நாளை மறுதினம் (24) ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் 22-03-2023.அன்று மாலை மஃரிப் தொழுகையை அடுத்து, கூடிய பிறைக்குழு மாநாட்டில் இம்முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
புனித ரமழான் மாத தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாததன் காரணமாக, ஷஃபான் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்யவும், புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் ஆரம்பிக்க இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.