புதன், 22 மார்ச், 2023

உலக அதிசயமான கிழக்கிலங்கையில் சிவபூமியினரின் பெரும்பணி

உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை திறந்து வைக்கப்படவுள்ளது என செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் தெரிவித்ததாவது
கிழக்கிலங்கை வரலாற்றில் சிவபூமி திருமந்திர அரண்மனை மார்ச் மாதம் 24 ஆம் திகதி மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இலங்கை சிவபூமி அறக்கட்டளையால் நிறுவப்பட்டுள்ள திருமந்திர அரண்மனை சம்பிரதாய பூர்வமாகத் திறந்த
வைக்கப்படவுள்ளது.
3 ஆயிரம் தமிழ் பாடல்கள் பல நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரலாற்றுப் பெட்டகமான திருமந்தி ரத்தைகையால்உளிகொண்டு மூன்று ஆண்டுகளாக இளைஞர்கள் கருங்கல்லில் செதுக்கியுள்ளனர்.
இந்தப் பாடல்களை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதியில் அமைக்கப்பட்டுள்ள திருமந்திர அரண்மனையில் சிவபூமி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கருங்கல்லினால் ஆக்கப்பட்ட கோவிலில் முகலிங்கப் பெருமானும் கிழக்கிலங்கையில் முதல் முதலாக வித்தியாசமான முறையில்
கிழக்கிலங்கையில் தானகத் தோன்றிய தான் தோன்றிஸ் இடத்துக்கு வந்த போது இந்த மாடு கருங்கல் மாடு சாணிபோடுமா என்று கேட்ட போது அந்த மாடு எழுந்து நின்றுபோட்டசாணி கருங்கல் சாணியாக இன்றைக்கும்
பாதுகாக்கப்படுகின்றது.
போர்த்துக்கேய தளபதிகளே இந்தக் கோவிலை பெருமையாக நினைத்து வழிபட்ட மரபு இன்றும் பேசப்படுகின் றது. அந்த இடத்தில் தோன்றிய தான் தோன்றீஸ்வரர் ஆலயம் கிழக்கிலே பிரமாண்டமான கோவில் பல லட்சம் மக்கள் ஒன்று கூடுகின்ற அந்தக் கோவிலில் இப்போது யாழ்ப்பாணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்த அறக்கட்டளை
அறக்கட்டளை பல தருளச் செய்துள்ளார்கள்.
இது மட்டுமல்ல திரு 108 சிவலிங்கமும் நடு திருமந்திர அரண்மனையை மந்திர அரண்மனைச் சுற்றாடல்கள் அமைத்துள்ளார்கள். புனிதம் பெறக் கூடியதாக அங்கே பல்வேறு விடயங்கள் நிலை நாட்டப்பட்டு சம்பிரதாய பூர்வமாகக் கிழக்கிலங்கை மக்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 24 ஆம்திகதி இடம்பெறவுள்ளது.
திருவாசக அரண்மனையை நாவற்குழியில் அமைத்து பேணிப் பாதுகாப்பது போன்று கிழக்கிலங்கையிலே இந்தப் பணி செய்து கிழக்கிலங்கை மக்களிடமே தான்தோன்றீஸ் வர ஆலயத்தின் நிர்வாகத்தி வரர் போத்துக்கேயர் அந்தண்டனே இந்தப் பணியை ஒப்படைக்கின்றார்கள்
கிழக்கிலங்கை மக்கள் மட்டுமல்லர், அனைத்து சைவ
 மக்களும் வருகை தந்து உலக அதிசயமான 3 ஆயிரம் பாடல்கள் கருங்கல்லில் பதிக்கப்பட்டுள்ள 1330 திருக்குறள் இந்தியாவில் 
கருங்கல்லில் பதிக்கப்பட்டுள்ளது. திருவாசகம் யாழ்ப்பாணத்தில் 650 காட்சியளிக்கின்றது.
இங்கே கருங்கற் கோவிலிலே முகலிங்கம் இலங்கையிலே ஒரே ஓர் ஆலயத்திலே இணுவில் காரைக்கால் சிவன் கோவிலிலே முகலிங்கம் இருக்கின்றது. இப்போது கிழக்கிலங்கையில் மூலக் பதிக்கப்பட்டுள்ளது. கருவறையிலே முகலிங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது
108 சிவலிங்கம் கருங்கல் அமைக்கப்பட்டிருக்கின்றது. 3 ஆயிரம் திருமந்திரப் பாடல்களும் வாசலிலிலே அசையாத் தேராக 
சிற்பத்தேர் ஒன்று உருவாக்கப்பட்டு அந்தத்தேரிலே சிவபெருமானும் திருமந்திரத்தைப் படைத்த திருமூலரும் சிற்பமாக 
எழுந்துள்ளார்.
ஆனால் உலகத்திலேயே 3 ஆயிரம் தமிழ்ப்பாடல்களை சுருங்கல்லில் பதிப் பித்த பெருமை சிவபூமி அறக்கட்டளையைச் சாரும். இதைத் தாங்குகின்ற பெருமை கிழக்கிலங்கை மக்களைச் சாரும். அற்புதமான இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் 
ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருமந்திர 
அரண்மனை எதிர்காலத்தில் சைவத்தின் அடையாளங்களில் ஒன்றாக 
திகழவுள்ளது.
காலத்தால் அழியாதவாறு கருங்கற்களில் #மூவாயிரம் திருமந்திர பாடல்களையும் பாரதிபுரத்தைச் சேர்ந்த #வினோத் என்ற கலைஞர் (புகழுடற் சின்னங்களில் தம் கைவினையை வெளிப்படுத்திய தேர்ச்சி மிக்கவரை ) கொண்டு கைகளால் செதுக்கி அதனை அமைக்கப்பட்டு 
வருகின்ற சிவபூமி திருமந்திர அரண்மனையில் பதித்து செயற்கரிய சைவப்பணியை கிழக்கிலங்கையிலும் (மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான் தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில்) செயற்படுத்திக் கொண்டிருக்கிறார் செஞ்சொற்செல்வர் கலாநிதி 
ஆறு.திருமுருகனார்.
வட புலத்தில் நாவற்குழியில் திருவாசக அரண்மனை அமைந்தமை போன்று எதிர்காலத்தில் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் திருமந்திர அரண்மனை அமையவுள்ளமை சிறப்பிற்குரியது.
இத்தகு சிறப்பிற்குரிய மட்டக்களப்பு சிவபூமி திருவாசக அரண்மனை நாளை மறுதினம் 24.03.2023 வெள்ளிக்கிழமை திறந்து 
வைக்கப்படவுள்ளது.
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.