வெள்ளி, 31 மார்ச், 2023

குடத்தனை கடற்கரையில் கடற்படை முகாமிற்கு அருகில் வந்த சிவலிங்கம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள்
 தெரிவிக்கின்றனர். 
குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக 
காணப்படுகிறது.
குறித்த சிவலிங்கத்தை யாராவது கொண்டுவந்து வைத்திருக்கலாம் 
என நம்பப்படுகிறது.
எனினும் குறித்த சிவலிங்கத்தை அதே இடத்தில் வைத்து வழிபடுவதற்கு சைவ மக்கள் எற்பாடு செய்து வருவதாகவும் பிரதேச தகவல்கள்
 தெரிவிக்கின்றன.
சிவலிங்கம் காணப்படும் இடத்யிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் கடற்படை முகாம் ஒன்றும் காணப்படுகிறமை 
குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.