செவ்வாய், 28 மார்ச், 2023

தமிழக கடற்கரையில் பிரித்தானிய வாழ் இலங்கை தமிழ் பிரஜை அதிரடியாக கைது

பிரித்தானியாவில் அகதி நிலை கோரிய இலங்கை தமிழர் ஒருவர் இந்திய கடலோர காவல்படையினரால் தமிழக கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 39 வயதான  தமிழரே  இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்டதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
 இலங்கைக்கு சட்டவிரோத  பயணம்
கைதான தமிழ் பிரஜை இலங்கையை விட்டு அகதியாக வெளியேறி இலங்கைக்கு திரும்ப முடியாது என்ற நிபந்தனையுடன் நிரந்தர விசா பெற்று லண்டனில் தங்கியிருப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.
கைதானவர் நேரடியாக இலங்கைக்கு செல்ல 
முடியாததால்,
 இந்தியாவுக்கு வந்த அவர், படகு மூலம் சட்டவிரோதமாக
 இலங்கைக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக தகவல்கள்
 தெரிவிக்கின்றன.
கைதான மேலதிக விசாரணைக்காக அவர் இலங்கை கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
அதேவேளை இலங்கை நாட்டில் உயிராபத்து என அகதி அந்தஸ்த்து கோருவோர் , இலங்கை நாட்டை தவிர எந்தவொரு நாட்டுக்கும் செல்ல அனுமதியுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.