இலங்கையில் சமீப காலமாக ஞாபகமறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டம்பர் 21ம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையிலும் ஞாபகமறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக இலங்கை அல்சைமர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இப்படியே அதிகரிக்கும் பட்சத்தில் எதிர்வரும் 2050ம் ஆண்டளவில் இலங்கையில் அரை மில்லியனுக்கும் அதிகமான ஞாபகமறதி நோயாளர்கள் காணப்படக் கூடும் என்றும் அல்சைமர் சங்கம்
எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, கடந்த காலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்ட கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாகவும் ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அல்சைமர் சங்கத்தின் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக