முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக இடமாகிய தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த வளாகத்தில் அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரையினுடைய கட்டுமானப் பணிகள் தொடர்பில் முல்லைதீவு நீதிமன்ற தடை உத்தரவுகளை மீறி விகாரை அமைப்பு பணிகள் நிறைவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதனை விட விடுமுறை தினத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் மக்களின் காணிகளுக்குள் எல்லைக் கற்கள் இடப்பட்டு மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு குருந்தூர் மலையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது.
மக்களுடைய மத உரிமை, நில உரிமை பறிக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலைமையில் இவற்றிற்கு எதிராக தொடர்போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு குறித்த பகுதியினுடைய பொது அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
அதற்கமைய நேற்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய குறித்த கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் நாளையதினம் 21ஆம் திகதி காலை 9 மணி முதல் குருந்தூர் மலை பிரதேசத்தில் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே தங்களுடைய போராட்டத்திற்கு அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகளினுடைய பிரதிநிதிகள், உள்ளிட்ட அனைத்து தமிழ் உவுகளையும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை
விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக