வெள்ளி, 9 செப்டம்பர், 2022

சீல் வைத்து இழுத்து மூடப்பட்ட யாழில் தனியார் விடுதி

யாழ்ப்பாணம் 5 சந்திப் பகுதியில் தனியார் விடுதி ஒன்றினை நடத்தி, அங்கு வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்தி, யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபடச் செய்த காரணமாக இருந்த விடுதி 08-09-2'022.அன்றய தினம்  தினம் சீல் வைத்து இழுத்து 
மூடப்பட்டது.
இந்த உத்தரவினை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிவான் 
ஆனந்தராஜா பிறப்பித்தார்.
புத்தளம் பகுதியில் இருந்து சிறுவர்களை அழைத்து வந்து அவர்களிடம் ஊதுபத்திகளை வழங்கி விற்பனையில் ஈடுபடுத்திய விடுதியே 
சீல் வைத்து மூடப்பட்டது
யாழ்ப்பாணம் பொலிசாரினாள் கடந்த மாதம் குறித்த விடுதியில் இருந்து ஏழு சிறு பெண் பிள்ளைகள், மூன்று ஆண் பிள்ளைகள் உட்பட 11 பேர் யாழ்ப்பாணம் சிறுவர் பிரிவு பொலிசாரினால் மீட்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதவான் குறித்த விடுதியினை சீல் வைத்து மூடுமாறு நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு கட்டளை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.