வெள்ளி, 23 செப்டம்பர், 2022

உங்க ஜாதகத்தில் குரு பெயர்ச்சியில் இந்த யோகம் இருக்காஅப்ப நீங்க அதிஷ்டசாலிதான்

சுப கிரகமான குரு சந்திரனுடன் இணைந்தோ அல்லது சந்திரனுக்கு ஐந்து அல்லது ஒன்பதாம் இடங்களில் இருந்தாலோ குரு சந்திர யோகம் ஏற்படுகிறது. குரு பகவானால் நாடாளும் யோகம் சிலருக்குத் தேடி வரும். குரு பகவான் அரசாளும் தகுதியை அள்ளித்தருவார். உங்களுடைய பிறந்த ஜாதகத்தில் குருபகவான் எங்கே எப்படி இருக்கிறார் என்று பார்த்து உங்களுக்கு இந்த யோகங்கள் இருக்கிறதா என்று முடிவு செய்து
 கொள்ளுங்கள்.
குருபகவான் பொன்னவன். தனது பொன்னான பார்வையினால் ஒருவரை சுபப்படுத்துவார். நிறைய நன்மைகளை செய்வார். திருமணம், குழந்தை பாக்கியம், நல்ல வேலை, கல்வி, வருமானத்தையும் தருவார். குருபகவானால் சிலருக்கு சில யோகங்கள் கிடைக்கும் அதில் முக்கியமானது குரு சந்திர யோகம். குரு சந்திர யோகம் தவிர குருபகவானால் சில முக்கியமான யோகங்கள் உள்ளன.
குருவினால் ஒருவருக்கு சகடயோகமும் ஏற்படும். சந்திரனுக்கு 2,6,8,12ஆம் இடங்களில் சந்திரன் இருந்தால் அது சகடயோகம். ஒருவருக்கு சகடயோகம் வந்தால் ஏற்றம் இறக்கம் நிறைந்த வாழ்க்கை அமையும். அரண்மனையில் சிம்மாசனத்தில் அமர்ந்து ராஜாவாக அரசாள வேண்டும் என்பதில்லை வேலை செய்யும் இடத்தில் உயர்பதவி கிடைத்தாலும், அரச வேலையில் உயர்பதவி கிடைத்தாலும் அது ராஜ யோக அமைப்புதான்.
கஜகேசரி யோகம்
கஜகேசரி யோகம் நன்மை தரக்கூடிய யோகமாகும். குரு பகவான் சந்திரனில் இருந்து 4, 7,10ல் இருந்தால் கஜகேசரி யோகமாகும். கஜம் என்றால் யானை கேசரி என்றால் சிங்கம். பல யானைகளுக்கு மத்தியில் வாழக்கூடிய சிங்கம் போன்ற வலிமை இந்த யோகத்தால் உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் சந்திரனுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் அமைந்திருப்பதால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. நீண்ட ஆயுள் புகழ், செல்வம், செல்வாக்கு, உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் எடுக்கும் காரியங்களில் வெற்றி, போன்ற உன்னதமான நற்பலன்கள் அமையும். அரசியலில் உயர்ந்த பதவிகளை வகிக்க கூடிய யோகம் உண்டாகும்.
நாடாளும் யோகம் தரும் குருபகவான்
ஒருவர் பிறந்த ஜாதகத்தில் குரு பகவான் ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகளில் ஏதாவது ஒன்றில் இருந்தால் குருபகவான் இருந்தால் அவருக்கு பல யோக அம்சங்கள் கூடிவரும். ஏதாவது ஒரு தலைமைப் பொறுப்பில் இருப்பார். வங்கி, நிதித்துறை, நீதித்துறையில் உயர்ந்த பதவிகளை வகிக்கும் பாக்யம் ஏற்படும். சமூகத்தில் இவரின் சொல்லிற்கு ஒரு மதிப்பு இருக்கும். நாடாளும் யோகத்தையும் குரு பகவான் அருள்வார்.
இந்த நான்கு ராசிகளும் வியாழ வட்டம் என்றும் குரு வளையமாகும்.
கோடீஸ்வர யோகம் தரும் குரு சந்திர யோகம்
குரு பகவான் சந்திரனை பார்ப்பார் அதாவது உங்களுடைய ராசியை தனது ஐந்து அல்லது ஒன்பதாம் இடங்களை பார்வையிடுவது, ராசியில் குரு சந்திரன் உடன் இணைவதால் இந்த யோகம் ஏற்படுகிறது. கல்வி ஞானம், உலக அறிவு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். லக்னாதிபதி சுமாரான நிலையில் இருந்தாலும் ராசிப்படி நன்மைகள் நடைபெறும்.
குரு மங்கள யோகம்
குரு மங்கள யோகம் குரு உடன் மங்களகாரகன் செவ்வாய் இணைவது குருபகவான் செவ்வாயை பார்வையிடுவது குரு மங்கள யோகமாகும். குருவிற்கு நண்பர் செவ்வாய். இருவரும் கூட்டணி அமைத்து ஒரு ஜாதகத்தில் இருந்தாலோ, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலோ இந்த யோகம் ஏற்படும். குருவிற்கு 4,7,10 ஆம் இடங்களில் செவ்வாய் அமர்வது குரு மங்கள யோகமாகும். இயற்கை பாவ கிரகமான செவ்வாய் சுபத்துவம் அடைந்து நன்மை தருவார். இந்த யோகம் உள்ளவர்கள் விளையாட்டு, ராணுவம், காவல்துறையில் சிறந்து விளங்குவார்.
செல்வம் செல்வாக்கு தரும் வசுமதி யோகம்
ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ குரு பகவான் 3,6,10,11 ஆகிய இடங்களில் சுக்கிர புதன் சேர்க்கை பெற்றிருந்தால் வசுமதி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் ஜாதகர் தன் சொந்த முயற்சியால் முன்னேறுவார். செல்வம், செல்வாக்கு யாவும் சிறப்பாக அமையும்.
அஷ்ட லட்சுமி யோகம்
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் குரு ஒன்று, நான்கு, ஏழு, பத்து எனப்படும் கேந்திர ஸ்தானங்களில் இருந்து ராகு ஆறாமிடத்தில் இருந்தால் அஷ்ட லட்சுமி யோகம் ஏற்படுகிறது. ஒருவருக்கு ஆறாம் வீட்டில் அசுப கிரகம் அமைவது சிறப்பு அதுவும் ராகு அமைவது அந்த வீட்டின் கடன், நோய், எதிரி தொல்லையை ஒழிக்கும்.
குரு சண்டாள யோகம்
ஜாதகத்தில் குரு, ராகு சேர்க்கை பெற்றிருப்பது அல்லது ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.
குரு கேது கூட்டணி தரும் யோகம்
குருவும், கேதுவும் இணைந்து ஒரு பாவத்தில் அமர்ந்திருப்பது கேள யோகம் எனப்படும் கோடீஸ்வர யோகத்தை தருகிறது. கேதுவிற்கு வலிமையான இடங்களாகச் சொல்லப்படும் விருச்சிகம், கன்னி, கும்ப வீடுகளிலும், மேஷம், கடகம் ஆகியவற்றிலும் இந்த அமைப்பு குரு மற்றும் கேது தசைகளில் ஜாதகருக்கு நல்ல யோகத்தை தரும். குறிப்பாக மேஷம், கடகம் ஆகிய சர ராசிகளில் இந்த கூட்டணி இருக்கும் நிலையில் ஜாதகரை வெளிமாநிலம், வெளிதேசத்திற்கு அனுப்பி செல்வத்தை 
அள்ளிக்கொடுக்கும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.