கொழும்பு -கிரேன்பாஸ் கஜீமா குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீ விபத்திற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ விபத்தினால் ஏராளமான வீடுகள் பாதிப்படைந்துள்ளன.
தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து காரணமாக குறித்த குடியிருப்பு பகுதியில் வசித்த மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் காற்று காரணமான தீ வேகமாக அங்குள்ள ஏனைய குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவுவதாகவும் அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் அனைவருமே இணைந்து தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீப் பரவல் காரணமான மக்களின் உடமைகள் மற்றும் சொத்துக்கள் என்பன முழுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிப்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக