புதன், 1 நவம்பர், 2023

நாட்டில் பேருந்து கட்டண அதிகரிப்புத் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

நாட்டில் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் 
அஞ்சன பிரியன்ஜித், 
மீண்டும் டீசல் விலை அதிகரிக்கப்படுமாயின் பேருந்து கட்டணமும் உயர்த்தப்படும் என தெரிவித்தார்.
இதேவேளை, டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து 
உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பேருந்து உரிமையாளர்களுக்கும் தேசிய
 போக்குவரத்து 
ஆணைக்குழுவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைய பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பயணக் கட்டணத்தை குறைக்க முடியாத நிலைமை காணப்படுவதாக முச்சக்கர வண்டி தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.