வெள்ளி, 10 நவம்பர், 2023

உலகில் முதல் நியூயோர்க்கில் இடம்பெற்ற முழு கண் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரம்

கடந்த 2021ல், அமெரிக்காவில் வசித்து வந்த 46 வயதான மின்சார துறை தொழிலாளி ஆரோன் ஜேம்ஸ் ஒரு விபத்தில் சிக்கினார். எதிர்பாராத விதமாக அவர் முகம் ஒரு மின்சாரம் பாயும் வயரில் படும்படி ஆனதால், 7,200 வோல்ட் மின்சார ஷாக் தாக்குதலுக்கு உள்ளானார்.
இதில் பலத்த காயமடைந்த அவருக்கு முழு இடது கண்ணுமே பறி போனது. இது மட்டுமின்றி இடது முழங்கை, மூக்கு, உதடு, முன்பற்கள், இடது கன்னம், தாடை ஆகியவை முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து, 
மே 27 அன்று நியூயார்க் லேன்கோன் ஹெல்த் எனும் முக சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு புகழ் பெற்ற மருத்துவ மையத்தில் 
அனுமதிக்கப்பட்டார்.
விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஆரோனுக்கு பலனளிக்காது என்பதால் "முழு கண் மாற்று அறுவை சிகிச்சை" அவருக்கு தேவைப்பட்டது. ஆனால், ஒருவர் இழந்த முழு கண்ணையும் 
மீண்டும் வேறொரு கொடையாளியிடம் பெற்றாலும் அதனை பொருத்துவது மருத்துவ உலகில் இதுவரை ஒரு மிக பெரிய சவாலாக
 இருந்து வந்தது.
டாக்டர். எடுவர்டோ ரோட்ரிகஸ் (Dr. Eduardo Rodriguez) தலைமையில் ஒரு மருத்துவர் குழு இந்த சவாலான முயற்சியில் இறங்கியது. அவரது மேற்பார்வையில் சுமார் 21 மணி நேரம் நடைபெற்ற 
இந்த அறுவை சிகிச்சையில் ஆரோனுக்கு முழு கண்ணும் வேறொரு கொடையாளியிடம் இருந்து பெறப்பட்டு வெற்றிகரமாக 
பொருத்தப்பட்டது. 
இந்த சிகிச்சையில் முப்பரிமாண அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது மாற்றப்பட்ட இடது கண்ணில் ரத்த ஓட்டம் சீராக உள்ளதாகவும், விரைவில் ஆரோனுக்கு கண் பார்வை கிட்டும் என நம்புவதாகவும் டாக்டர். ரோட்ரிகஸ் தெரிவித்தார்.
 விபத்து மற்றும் பல்வேறு இதர காரணங்களால் கண் பார்வை இழந்தவர்களுக்கு இது ஒரு நற்செய்தி என பல்வேறு பிரபல கண் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது   




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.