திங்கள், 6 நவம்பர், 2023

பலாங்கொடையில் வசித்து வரும் இரண்டு வயது சிறுவன் படைத்த உலக சாதனை படைத்தார்.

இலங்கை பலாங்கொடையில் வசித்து வரும் ராஜீவ்காந்தி மற்றும் ரொஷானி தம்பதிகளின் மகனான ஆரோன் சாத்விக் என்ற 2 வயது 11 மாதங்கள் ஆன சிறுவன் 100 மீட்டர் தூரத்தை 30 நொடிகளில் ஓடி முடித்து சோழன் உலக சாதனை படைத்தார்.
இந்த நிகழ்வானது நேற்று (05) பலாங்கொடை பெரிய மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் நடுவர்களாக சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, இரத்தினபுரி மாவட்டத் தலைவர் பிரவீனா பாரதி மற்றும் நுவரெலியா மாவட்டத் தலைவர் சாம்பசிவம் சதீஷ்குமார் போன்றோர் நிகழ்வைக் கண்காணித்து
 உறுதி செய்தனர்.
 சோழன் உலக சாதனை படைத்த சிறுவனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட அதேவேளை, அங்கிருந்த அனைவரும் அவரை வாழ்த்திப் பாராட்டினார்கள்
இவருக்கு எமது இணையங்களின்  பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிகின்றன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.