வெள்ளி, 3 நவம்பர், 2023

சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகம் இலங்கையில் அழகான இடத்தில் உருவாகின்றது

இலங்கை கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு மேலே 600 ஏக்கர் காணி ஏற்கனவே சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக 
ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
 தெரிவித்துள்ளார்.
 காலநிலை மாற்றம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்திற்கு மாறுவதற்கு எதிராக இலங்கை குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
 அரலிகஹா மன்றில் இடம்பெற்ற முதலாவது சர்வதேச காலநிலை மாற்ற மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் 
குறிப்பிட்டுள்ளார்.
 கடந்த ஆண்டு காலநிலை செழிப்பு திட்டத்தை தான் முன்வைத்ததாகவும், இந்த ஆண்டு COP 28 இல் நிகர பூஜ்ஜிய உமிழ்வு திட்டத்தை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.