யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட விடயத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென இராணுவம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டமை குறித்து இராணுவத்தின் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.பி.சி தமிழ் வினவிய போதே, இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உள்ளக
விடயங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் தலையீடு செய்யாது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் இராணுவத்தின் தலையீடு எதுவும் இல்லையெனவும் பல்கலைக்கழக
நிர்வாகத்தின் தீர்மானத்திற்கு அமையவே இந்த விடயம் இடம்பெற்றுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சிக்கலுக்குரிய சம்பவங்களின் போது பொலிஸாருக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் கோரிக்கை விடுத்தால் மாத்திரம் தம்மால் தலையீடு செய்ய முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வேறு எந்தவொரு விதத்திலும் தம்மால் அந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக