திங்கள், 18 ஜனவரி, 2021

யாழ் மண்டைதீவில் காணி அபகரிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்

யாழ் மண்டைதீவு பிரதேசத்தில் வெலிசுமண கடற்படை முகாமுக்கு அருகில் சட்டவிரோதமான காணி அபகரிப்புக்கு எதிராக மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் இணைந்து 18-01-2021.இன்றுபோராட்டம் மேற்கொண்டுள்ளனர்.கடற்படையினருக்கு ஒரு அங்குலம் நிலத்தை கூட வழங்குவதற்கு ஒட்டுமொத்த தமிழ்மக்களும் தயாரில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்
 தெரிவித்தார்.
18-01-2021.இன்று மண்டதீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவேளை அதனை கண்டித்து பொதுமக்களும் தமிழ்அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டத்தில் 
ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது 29 குடும்பங்களை சேர்ந்த மக்களும் தங்களின் சொந்த நிலங்களை இழக்க தயாரில்லை. மீண்டும் மீண்டும் மக்களை குழப்பும் விதத்தில் காணி திணைக்களம் நடந்துகொள்கின்றது.
பிரதேச செயலாளர் இந்த பிரதேசத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர் என்ற அடிப்படையில் அவர்களிற்கு இதனை 
தெரிவிக்கவேண்டும்.
மீண்டும் மீண்டும் நிலங்களை அளப்பதற்கு அனுப்புகின்றனர் ஆற்றில் ஒடும் நீர் நித்திரையா முழிப்பா என பார்ப்பதற்கு கொள்ளி வைத்து பார்ப்பது போல காணித்திணைக்களம் செயற்படுகின்றது,
இது மக்களை குழப்புகின்ற முயற்சி மக்களிற்கு இதில் விருப்பமில்லை என காணித்திணைக்களத்திற்கும் அரசாங்க அதிபருக்கும் பிரதேச செயலாளர் தெரிவிக்கவேண்டும்.
மக்களை அபிவிருத்தி செய்து முன்னேற்றுவதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை அரசாஙகம் எடுக்கவில்லை,காணிகளை பறிப்பதற்கு மாத்திரம் தான் அலுவல்கள் இடம்பெறுகின்றன
காணித்திணைக்களத்திடம் இந்த நோக்கத்தை கைவிடுமாறு பிரதேச செயலாளர் தெரிவிக்கவேண்டும்,வாழ்க்கையில் கடற்படையினருக்கு காணி கொடுப்பதற்கு ஒருபோதும் மக்கள் இணங்கமாட்டார்கள் இந்த மக்களும் தங்க
ள் காணிகளை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை என
 அவர் தெரிவித்தார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.