இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுதூபி மீள நிறுவப்படுமென மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்த போராட்டத்தை கொரோனா தொற்றை காரணங்காட்டி காவல்துறை
முடக்கியுள்ளது.
இதனிடையே நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தில் தூபி இடிக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து தற்போது யாழ் பல்கலை கழக பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராஜா
தெரிவித்துள்ளார்
பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது சிறீசற்குணராஜா மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள அசாதாரணநிலையினை அடுத்து தற்பொழுது பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்கான பொறுப்பு பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அது அரச நிறுவனத்திற்கு எதிராக அசாதாரண நிலை ஏற்படும்போது அதனை பாதுகாக்கும் பொறுப்பு வழமையாக பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும். அதேபோலவே
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கும் தற்பொழுதுள்ள அசாதாரண .நிலையை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக