நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 6 மாதங்களில் இழக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு சபையின் தலைவர் நிமல் ஜீ.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
6 மாதங்களுக்கு அவர் தனது பதவியை இராஜினாமா செய்தால் அவரது ஆசனத்திற்கு வேட்பு மனுவில் அடுத்த இடத்தில் உள்ளவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என
அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்கள் நிறைவடைந்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் அவர் தனது பிரஜா உரிமையையும் இழப்பார் என
அவர் கூறியுள்ளார்.அவர் விடுதலையாகிய நாள் முதல் 7 வருடங்கள் அவரது பிரஜா உரிமையும் இழக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் 12ஆம் திகதியின் பின்னர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக