இலங்கையில் இருக்கும் அரச. பலசரக்கு சில்லறை விற்பனை .
நிலையம். சதோச இந்த சில்லறை விற்பனை நிலையம் இப்போது "கொரோணா சீசன்" விற்பனை யை வறிய மக்கள் மக்கள் நெருங்க முடியாத அளவிற்கு "ராக்கற் வியாபாரம் " செய்கிறது என்றால் உங்ளால் நம்ப முடிகிறதா?
போன வருடம் வரையில் சகல
மக்களுக்கும் மற்றைய தனிப்பட்ட கடைகளில் விற்கும் விலையை விட குறைந்த விலையிலேயே பொருட்கள் விற்கப்பட்டது.
இந்த வருடம் கொரொணா வால் ஊரடங்கு சட்டம் சுமார் 2 மிதம் முடக்கப் பட்ட நிலையில் கூட சதோச கடைகளில் நேரக்கட்டுப் பாட்டில் பொருட்கள் நியாய விலைக்கு விற்கப்பட்டது.
இரண்டாவது அலை நேரத்தில் ஊர்கள் தெருக்கள் முடக்கப் பட்ட நிலையில் ரூபா 600/: மேல் வேறு பொருட்கள் வாங்குபவர்களுக்கு
மட்டுமே மட்டுமே நாளாந்த தேவைகளான அரிசி, சீனி,மைசூர் பருப்பு வெங்காயம் போன்ற பொருட்கள் வாங்க முடியும் என்ற முறையில்
வியாபாரம் நடக்கிறது.
இது பற்றி எந்த ஒரு நுகர்வோர் சபையோ, வர்த்தக விலைக்கட்டுப்பாட்டு அலுவலகமோ, பாரளமன்ற அங்கத்தினர்களோ, ஆளும் கட்சிசார் அமைச்சர்களோ கண்டு கொள்ளாமலே கடந்த
2 மாத காலமாக விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிது.
இதே நேரத்தில் தனியார் கடைகளில் எந்த விதமா ராக்கற் இல்லாமல் 5/:, 10/: ரூபா அதிகமாக கொடுத்தால் தேவையின அளவில் பொருட்கள் வாங்க கூடியதாக இருக்கிறது.
சதோச அரச நியாய விலைக்கடை என்பதால் மக்கள் பலர் வேறு இடங்களை நாடுவதில்லை.
இங்கு அத்தியாவசிய பொருட்களின் சதோச கடைகளில் விலையும்,
தனியார் கடைகளில் விலையும்.
சதோச
விலை.
ரூபா 600/: கட்டாய பில்.
நிபந்தனை
ஒருவருக்கு 2 கிலோ
சீனி 1 கிலோ 85/:
மைசூர்பருப்பு
1 கிலோ 175/:
வெங்காயம்
1 கிலோ 165/:
வெள்ளைப் பச்சை
1 கிலோ 93/:
நிபந்தனை அற்ற
Gargils food city
சீனி 1 கிலோ 90/:
மைசூர்பருப்பு
1 கிலோ 187/:
வெங்காயம்
1 கிலோ 160/:
வெள்ளைபச்சை
1கிலோ 105/:
கையில் 500/': மட்டும் வைத்திருப்பவன் சதோச வில்
அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலமை.
இதில் உள்ள விலைகள் நேற்றைய தினம் 11.12.2020 வெள்ளிக்கிழமை கொள்வனவு செய்யப்பட்டது
சதோச /Gargils food city இரண்டிலும் கொள்வனவு செய்யப்பட்டது .
இந்த பதிவை பகிர்வதின் மூலம் யாராவது
அரசாங்க அதிகாரிகளோ /
பாரளமன்றஉறுப்பினர்களோ
அமைச்சர்களோ பார்வையில் பட வாய்ப்பு உள்ளது.
ஒன்று பத்தாகி
10---100 ஆகி
100-- 1000. "
1000-- 10000 "
10000-- 100000 "
100000-- 1000000"
1000000-- 10000000 "
அப்பா போதும்.போதும்.போதும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக