சனி, 2 ஜனவரி, 2021

மாவனல்ல கற்குவாரியில் காணாமல் போன வெடி பொருட்கள் சிக்கியது; நால்வர் கைது

கேகாலை – மாவனல்ல கற்குவாரி ஒன்றில் இருந்து அண்மையில் கிலோக் கணக்கில் வெடிமருந்துகள் காணாமல்
 போனமை
 தொடர்பில் சிங்களவர்கள் நால்வர் சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்பட காணாமல் போன 15 கிலோ
 நைட்ரேட் வெடி மருந்து, 750 கிராம் வாடர் ஜெல் மருந்து, 20 டெட்டனேட்டர்கள், 35 மீட்டர் வயர் உள்ளிட்டவை பேராதனையில் மீட்கப்பட்டுள்ளன.
>>>>>>
மாவனல்லயில் வெடிமருந்து காணாமல் போனமை தொடர்பான விசாரணை சிஐடியிடம்
>>>>>>>>>>>


கேகாலை – மாவனல்ல கற்குவாரி ஒன்றில் இருந்து அணமையில் 15 கிலோ நைட்ரேட் வெடி மருந்து, 750 கிராம் வாடர் ஜெல் மருந்து, 20 டெட்டனேட்டர்கள், 35 மீட்டர் வயர் உள்ளிட்டவை காணாமல் போனமை தொடர்பிலான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி)
 கையளிக்கப்பட்டுள்ளது..
பொலி்ஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய விசாரணைகள் சிஐடியிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் தேசிய புலனாய்வு பிரிவும் இவர்களுடன் இணைந்துள்ளது.
கல்லுடைப்புக்காக, மாவனெல்லை, நியூ லேன்ட் தோட்ட, கற்குவாரி ஒன்றில் வெடிமருந்துகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவை காணாமல் போனமை தொடர்பில் 22ம் திகதி மாவனெல்லை பொலிஸில் உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார்.
எவ்வாறாயினும் அம்முறைப்பாட்டில் அங்கு சேவையில் இருந்த ஒருவர் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்ட போதும், அவர் அவற்றை களாவடியமைக்கான சான்றுகள் இன்று வரை உறுதி செய்யப்படாத நிலையிலேயே விசாரணைகள் சிஐடியினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.