வியாழன், 28 ஜனவரி, 2021

பொதுமக்கள் கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்ட 34 ஆவது ஆண்டு நினைவு தினம்

கொக்கட்டிச்சோலையின் 34 வது ஆண்டு படுகொலை தினம் மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள “கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி” முற்றத்தில் இன்று வியாழக்கிழமை (28)  காவல்துறையினரின் தடைகளையும் மீறி இடம்பெற்றது.
இதன்போது நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கம் செலுத்தி உயிரிழந்தவர்களை
 நினைவு கூர்ந்தனர்.
1987ஆம் ஆண்டு, முதலைக்குடா இறால் வளர்ப்புப் பண்ணையில் வேலைசெய்த முனைக்காடு, முதலைக்குடா, மகிழடித்தீவு, பண்டாரியாவெளி, படையாண்டவெளி, கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு, அம்பிளாந்துறை, கற்சேனை, பட்டிப்பளை, தாந்தாமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 65 மக்கள் படுகொலை 
செய்யப்பட்டனர்.
இப்படுகொலையை விசாரணை செய்வதற்கென அப்போதைய சிறீலங்கா அதிபரான ஜே.ஆர் ஜெயவர்த்தன சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக ஒரு ஆணைக்குழுவை நியமித்தார். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நீதியையையும் பெற்றுக் கொடுக்கவில்லை. 
குறித்த படுகொலையின் போது உயிரிழந்த தமிழர்களை நினைவு கூரும் வண்ணமே ‘கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி 2000ஆம் ஆண்டு மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டமை 
குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது என மண்முனை தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் தி.புஸ்பலிங்கத்திற்கு  காவல்துறையினர் தடைவிதித்ததன் காரணமாக தவிசாளர் இந்நிகழ்வில் கலந்து 
கொண்டிருக்கவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம் (ஜனா), இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினளர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபையின்
 முன்னாள் பிரதித் தவிசாளர், இ.பிரசன்னா, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், வடகிழக்கு வாலிபர் முன்னணித் தலைவர், கி.சேயோன், மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவர், லோ.தீபாகரன், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து 
கொண்டிருந்தனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.