செவ்வாய், 26 ஜனவரி, 2021

இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கைக்கு இன்று பதில்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கான பதிலை-26-01-2021. இன்று செவ்வாய்க்கிழமை மாலை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தமிழ் ஊடகமொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அந்த அறிக்கையில் காணப்படும் தரவுகள், குறைபாடுகள், பிழைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தற்போது தனித்தனியாக 
ஆராயப்படுகின்றது.
மிக ஆழமாக ஆராய்ந்ததன் பின்னர் அந்த அறிக்கைக்கான பதிலை.26-01-2021. இன்று மாலை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
இலங்கை அரசினால் சமர்ப்பிக்கப்படும் பதில் அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் ஏற்றுக்கொள்வார் என தாம் நம்புவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில், இலங்கை குறித்த விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதன் மூலம், உலகளாவிய அதிகார 
வரம்பின் கீழ் விசாரணைகள் மற்றும் வழக்குகளை நிறுவுதல் மற்றும் சர்வதேச குற்றங்களில் சிக்கியுள்ள இலங்கை அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தல் உள்ளிட்ட காட்டமான தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.