வெள்ளி, 21 ஜூலை, 2023

பிக்கு மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் ஆர்ப்பாட்டம்: பொலிஸார் நீர்தாரை பிரயோகம்


கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
 அனைத்து பல்கலைக்கழக  பிக்கு மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் நீர்தாரை பிரயோகம் 
மேற்கொண்டுள்ளனர்.
 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது, ​​கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில்
 இந்த நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனை, களனி உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கு மாணவர் சேர்க்கையை விரிவுபடுத்தவும், ️️பாளி, சமஸ்கிருதம், பௌத்த தத்துவம்/ஆய்வு உள்ளிட்ட பாடங்களை வெட்டுவதை நிறுத்துங்கள் என்ற கோஷங்களை எழுப்பியவாறு பிக்கு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.