திங்கள், 17 ஜூலை, 2023

நாட்டில் மருத்துவமனை இறப்புகளை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்


சுகாதாரத்துறைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள அரச வைத்தியசாலைகளில் கடந்த சில நாட்களுக்குள் ஏற்பட்டுள்ள மரணங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க ஐந்து பேர் கொண்ட குழுவொன்றை
 சுகாதார அமைச்சர் அறிவிக்கவுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.இந்த
 நிபுணர் குழுவில், மருத்துவம், செவிலியர், ஒவ்வாமை 
ஆகிய இரண்டிலும் விரிவான அறிவும் புரிதலும் உள்ள பேராசிரியர்கள் உட்பட 5 பேர் இடம் பெறுவார்கள் என்றும் அவர்
 குறிப்பிட்டுள்ளார்
.மேலும், அரச மருத்துவமனைகளில் நடந்த அனைத்து சர்ச்சைக்குரிய மரணங்கள் குறித்தும் முழு விசாரணை நடத்தி அமைச்சரிடம் அறிக்கை சமர்பிப்போம். கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுகாதாரப் பணிப்பாளர் மேலும், இந்தக் குழுவினால் வழங்கப்படும் 
அறிக்கை நாட்டில் உள்ள வைத்தியசாலை அமைப்பில் உள்ள மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்கு உதவிகரமாக
 இருக்கும் எனவும் தெரிவித்தார்.சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே சுகாதாரத்துறையின் 
எதிர்பார்ப்பு என அவர் வலியுறுத்தியுள்ளார்.சில மரணங்கள் சந்தேகத்திற்கிடமானவை என ஊடகங்களில் பரப்பப்படும் 
செய்திகளால், மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வரத் தயங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளர்களுக்கு வைத்தியசாலைகளினால் வழங்கப்படும் சுகாதாரம் சீர்குலைந்திருக்கவில்லை எனவும் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.பேராதனை போதனா வைத்தியசாலை, 
பேராதனை சிறுவர் வைத்தியசாலை மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையை அவதானித்ததன் பின்னர் பெறப்பட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையை தமக்கு வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது        

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.