ஞாயிறு, 16 ஜூலை, 2023

யாழ் காங்கேசந்துறைக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் சேவை இயக்குவதற்கு நடவடிக்கை

யாழ் காங்கேசந்துறை மற்றும்  கொழும்புகும்  இடையில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் கருத்தின் அடிப்படையில் இந்த சொகுசு ரயில் சேவையில் முன்னெடடுக்கப்பட்டுள்ள ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார்.
இரவு 10 மணியளவில் இந்த சொகுசு ரயிலை இயக்கலாம் என திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில் இந்த ரயிலுக்கான டிக்கெட்டின் விலை சுமார் 4000 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு ரயில்வேயின் ஒரு பகுதி நவீனமயப்படுத்தப்பட்டதன் பின்னர் கோட்டைக்கும் காங்கேசந்துறைக்கும் இடையில் தினமும் ஆறு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் இடிபோலகே தெரிவித்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.