பொருளாதார சிக்கல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக அடுத்த 05 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 14 மில்லியன் வேலைகள் இழக்கப்படும் என எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டு, 69 மில்லியன் புதிய வேலைகள் உருவாக்கப்படும், ஆனால் சுமார் 83 மில்லியன் வேலைகள் இழக்கப்படும்.
உலகம் முழுவதும் உள்ள சுமார் 800 நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உலக பொருளாதார மன்றம் இந்த கணிப்பை வெளியிட்டுள்ளது.
இழக்கப்படவுள்ள 14 மில்லியன் வேலைகள் தற்போதைய உலக பணியாளர்களின் 02 வீதத்திற்கு சமம் என்று
கூறப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு காரணமாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் உருவாக்கப்படும் வேலைகள் மட்டுமின்றி வேலைகளும் இழக்கப்படலாம் என்றும் இது கணித்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக