சனி, 15 ஜூலை, 2023

நீதிமன்றம் பிரித்தானியாவில் 2 இந்தியர்களுக்கு விடுத்த கடுமையான தண்டனை


இந்திய அகதிகள் 3 பேரை காருக்குள் மறைத்து வைத்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் அழைத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
பிரித்தானியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி 
சேர்ந்த 48 வயதான பல்விந்தர் சிங் புல் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் தென்கிழக்கு பிரித்தானியாவில் உள்ள எல்லையோர நகரமான டோவரில் காரில் சென்று கொண்டிருந்தபோது எல்லை பாதுகாப்பு படையினர் 
தடுத்து நிறுத்தினர்.  
தொடர்ந்து, அவரது காரை சோதனை செய்தபோது, காருக்குள் இந்திய அகதிகள் 3 பேரை மறைத்து வைத்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் அழைத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பல்விந்தர் சிங்கை பொலிஸார் கைது செய்தனர்.இச் சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் அதே டோவர் நகரில் மற்றொரு இந்திய வம்சாவளியான ஹர்ஜித் சிங் தலிவால் என்பவர் 4 இந்திய அகதிகளை காரில் மறைத்து கடத்தி வந்தபோது எல்லை பாதுகாப்பு படையிடம் சிக்கினார். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.  
கைது செய்யப்பட்டவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை நடந்தது. அப்போது பல்விந்தர் சிங் மற்றும் ஹர்ஜித் சிங் ஆகிய இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்புளித்தார்.  
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.