ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள் கைப்பற்றின.
பல நாடுகளுக்கு கருங்கடல் வழியாக கோதுமை, பார்லி போன்ற தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசிய உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் போர் காரணமாக
தடைப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் கருங்கடல் தானிய ஒப்பந்தம் செய்தது. அதன்படி உக்ரைனின் மூன்று துறைமுகங்களில் இருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி செய்ய ரஷியா சம்மதித்தது.
இந்நிலையில் கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது. இந்நிலையில், தானிய ஒப்பந்ததில் இருந்து
ரஷியா விலகியதால் தானியங்களின் விலை உயர்வு, கோடிக்கணக்கான மக்களுக்கு பசி மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வின் அவசர கால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறும்போது, "தற்போது 69 நாடுகளில் சுமார் 36 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது.
தானிய விலை உயர்வு என்பது வளரும் நாடுகளில் உள்ள குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது. பசி-பட்டினியால் வாடுவார்கள். இதன் காரணமாக பலர் இறக்கக் கூடும் என்றார்.
போதுமான உக்ரேனிய தானியங்கள் ஏழை நாடுகளை சென்றடையவில்லை என்று ரஷியா புகார் தெரிவித்து, ஒப்பந்தத்தில் இருந்து விலகியது என்பது என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக