இன்று சனிக்கிழமை கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள அரச பேருந்து தரிப்பிடத்தின் முன்னால் அரச பேருந்து சாரதிகளிட்கும் தனியார் பேருந்து சாரதிகளிட்கும் இடையில் கைகலப்பு இடம்பெறுள்ளது இதில் தனியார் மற்றும் அரச பேருந்து சாரதிகள் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இதன்போது கோண்டாவில் சாலைக்கு முன்பாக தனியார் பேருந்து மறிக்கப்பட்டு அக்கரைப்பற்று
வழித்தட பேருந்து சாரதி மற்றும் கோண்டாவில் சாலையில் பணியாற்றிய சிலரால் தாக்கப்பட்டு கோண்டாவில்
சாலைக்குள் இழுததுச் செல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள தனியார் பேருந்து சாரதிகள் கோண்டாவில் சாலைக்கு
முன்பாக பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து எம்மிடம் பேசிய 764 வழித்தட தனியார் பேருந்து சாரதிகள் குறித்த வழித்தடத்தினூடான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்
தாக்குதல் மேற்கொண்ட நபர்களை கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாதுவிடின் முழு அளவிலான பணிப்புறக்கணிப்பில்
ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளர்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் முன்னரும் இவ்வாறு முறையற்ற விதத்தில் நடைந்துகொள்கின்றபோதும்
சமரசமாக தாம் பிரச்சனைகளை பெரிதாக்காது விலகிச் செல்வதாகவும் அதன் பலாபலனை இ.போ.ச சாரதிகள் இன்று தமது சாரதியைத் தாக்கியதன்
மூலம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டனர் எனவும் இம்முறை சமரச முயற்சிக்கு தாம் தயாரில்லை எனவும் தெரிவித்த அவர்கள் கைதின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கை ஒன்றினை
மேற்கொள்ளவேண்டும் என்பதே தமது கோரிக்கை எனவும் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக