ஞாயிறு, 18 டிசம்பர், 2016

சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!!

மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினயா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் மற்றும் பசிபிக் சுனாமி எச்சிரிக்கை மையம் கூறியுள்ளது.
Taron, நியூ அயர்லாந்து கிழக்கு பகுதியில் 60 கி.மீ தொலைவில் 
சுமார் 75 கி.மீ ஆழத்தில்,
 உள்ளுர் நேரப்படி மாலை 8.51 மணிக்கு இந்த நிலநடுக்கும் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பப்புவா நியூ கினியா, நவ்ரூ, சாலமன் தீவுகள், இந்தோனேஷியா, உட்பட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினயாவில் சில இழப்புக்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்னும் சேதங்கள் குறித்த தெளிவான அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.