ஞாயிறு, 25 டிசம்பர், 2016

தமிழர் திருமணத்தில் உக்கிர மோதல்? சோறு – கறிகள் சிதறின…

கனடாவின், டொரன்டோவில் இடம்பெற்ற திருமணமொன்றில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி
 வெளியிட்டுள்ளன.
குறித்த மோதலானது மணப்பெண் மற்றும் மணமகன் குடும்பத்தினரிடையே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மோதலின் காணொளியும் இணையத்தில்
 வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இம்மோதலுக்கான காரணம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
மணமகளின் முன்னாள் காதலன் திருமணத்துக்கு வந்து அந்தரங்க படங்களை சிலவற்றை வெளியிட்ட தாகவும் இதன் பின்னரே மோதல் இடம்பெற்றதாகவும் சில ஊடகங்கள் 
தெரிவிக்கின்றன.
எனினும் மணமகன் மற்றும் மணமகள் தரப்புகளுக்கிடையில் நிலவிய மனக்கசப்பே மோதலுக்கான காரணமென 
தெரிவிக்கப்படுகின்றது
இத் திருமணம் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்களுடையது என அத்திருமணத்தில் கலந்துகொண்டவர்களால் சமூகவலைதளங்களில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் இது இலங்கைத் தமிழர்களினது எனக் கூறி காணொளியும் பதிவேற்றப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.