இன்னும் இரண்டு நாட்களில் புதிய புயல் கிளம்பி வருகிறது..! இது வைகைபுயல் போல காமெடிப் புயல் அல்ல. மிக மோசமான புயல் என்கிறார்கள் வானவியல் நிபுணர்கள்.
இலங்கை பஞ்சாங்கமும் கொஞ்சம் அதிர வைப்பதாகவே இருக்கிறது..! தனுஸ்கோடி முற்றிலும் அழிந்தது போல சென்னையின் சில பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும்,இலங்கைக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு வரலாற்று ரீதியான கதையும் கூறப்பட்டுள்ளது.
அதாவது, ராவணன் வதம் நடந்த போது நடந்த கடும் சண்டையில் ராவணன் வெற்றி பெற முனிவர்கள் சேர்ந்து யாகம் வளர்த்தார்கள். அவர்கள் யாகம் வளர்ப்பதை அறியாத வானர சேனைகள், ராவணபடைகளை அரண்மனையை விட்டு வெளியேற்ற பெருமளவு தண்ணீரை மழையாக பெய்ய வைத்து அரண்மனைக்குள் செலுத்தினார்கள்.
இதனால் யாகம் கெட்டது. அப்போது கடும் சினம் கொண்ட முனிவர்கள் வானத்தை நோக்கி சாபம் இட்டனர். தண்ணீரே அழிந்து போ..தண்ணீரால் அழிந்து போ..என்று முனிவர்கள் சபித்தனர்.
அந்த சாபம் தான் அடிக்கடி இலங்கை சுனாமியாலும், கடும் வெள்ள சேதத்தாலும் அழிந்து பெரும் உயிர் சேதத்தை உருவாக்கி வருகிறது என்று வரலாற்று சம்பவத்தோடு தொடர்புபடுத்தி கூறுகிறார்கள்.
இப்பொது வரும் மாருதா புயல் கடும் சீற்றத்துடன்..அசுர வேகத்தில் தாக்கும் இந்த புயலில் இலங்கை பெருமளவு பாதிக்கும் என்று கூறுகிறார்கள்.
அதே போல சென்னையின் கடலோரப் பகுதிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
வருண பகவனே மக்களைக் காப்பாற்று..!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக