வியாழன், 1 டிசம்பர், 2016

யாழ். குடாநாடு பலத்த சூறாவளியில் சிக்கி கொண்டுள்ளது ! (காணொளி இணைப்பு)

யாழில் இன்று அதிகாலை முதல் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருவதுடன், கடும் மழையும் பொழிந்து வருகின்றது என இலங்கையின் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
பலத்த சூறாவளிக் காற்று மற்றும் கடும் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.
சூறாவளி காரணமாகப் பல இடங்களிலும் பயன்தரு மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளன.அத்துடன் யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இலங்கையின் திருகோணமலையிலிருந்து 720 கிலோ மீற்றர் தொலைவில் வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மையம் யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்ந்து வருவதாக இலங்கையின் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலையில் இருந்து கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவுகின்றதாகத் தெரியவருகின்றது. இன்று காலை தெருவில் போகமுடியாத அளவுக்கு கடும் குளிர் நிலவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதே வேளை காற்றுடன் கூடிய மழை குடாநாட்டில் பெய்து கொண்டிருப்பதாக தெரியவருகின்றது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



காணொளி இணைப்பு யாழில் இன்று அதிகாலை பலத்த சூறாவளிக் காற்று >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.