யாழ் புத்தூர் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நேற்று வித்தியாலய மண்ட பத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வித்தியாலய முதல்வர் J.A தவநாயகம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக
வட க்கு மாகாண உறுப்பினர் ஆனந்தி சசிதரன், சிறப்பு விருந்தினராக கோப்பாய் கோட்டக்கல்வி பணி ப்பாளர் நா.சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை
வழங்கிவைத்தனர்.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தனது நிதி ஒதுக்கீட்டிலிருந்து 50,000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை கல்லூரி அதிபரிடம் கையளித்தார்.
வெகு சிறப்பாக நடைபெற்ற இப் பரிசளிப்பு விழாவில் பாடசாலை பழைய மாணவர்கள் உட்பட பொது மக்கள் பலரும்
கலந்து கொண்டனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக