வெள்ளி, 6 மே, 2022

பொருளாதார நிலையில் உலகின் மோசமான முதல் நாடாக மாறிய இலங்கை

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் மற்றும் வட்டிக்கு அதிக சதவீதத்தை ஒதுக்கும் உலகின் முதல் நாடாக இலங்கை மாறியுள்ளது என நிதி அமைச்சர் அலி சப்ரி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நிலையியற் கட்டளை 27 (02) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் 
சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்
 போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.அதற்கமைய, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 71.7 சதவீதம் கடன் தேவைக்காக ஒதுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டில் 14.15 ட்ரில்லியன் ரூபாயாக இருந்த கடன் தொகை தற்போது 19.4 ட்ரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதென நிதி அமைச்சர் அலி சப்ரிமேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>






வியாழன், 5 மே, 2022

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி யாழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம்

அரசாங்கத்துக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில்.06-05-2022. நாளை நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி யாழ்.நகர்ப் பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் இணைந்து .05-05-2022-இன்று இந்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் யாழ். நகரிற்கு வருகை தந்தவர்களுக்கும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் 
செய்யப்பட்டுள்ளன.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





புதன், 4 மே, 2022

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளார்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முன் வந்துள்ளார். அதன்படி இலங்கை மக்களுக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விஜயகாந்த் இன்று டுவிட்டரில்,
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தே.மு.தி.க. சார்பில் முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் விஜயகாந்த் இன்று டுவிட்டரில்,
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தே.மு.தி.க. சார்பில் முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
அதேவேளை இலங்கை மக்களுக்கு உதவிகள் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் 
கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் நிதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட மு.க.ஸ்டாலின், தி.மு.க. சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்கப்படும் எனவும், தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் எனவும் தெரிவித்து இருந்தமை
 குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



பாணந்துறையில் பாடசாலைக்கு தீ வைத்த மாணவர் இருவர் கைது

நாட்டில் பாணந்துறை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் , கணனி ஆய்வு கூடம் என்பவற்றுக்கு மாணவர்கள் இருவர் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீ விபத்தில் கணினி ஆய்வகத்தில் இருந்த இருபதிற்கும் மேற்பட்ட கணினிகள், துணைக்கருவிகள், மின்விசிறிகள், ஏராளமான பாடப்புத்தகங்கள், அதிபரின் நாற்காலி மற்றும் பல கோப்பைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
8 மற்றும் 12 வயதுடைய மாணவர்களே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து 
தெரியவருகையில்,
மாணவர் ஒருவர் அணிந்து வந்த கையுறை தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிபர் தண்டனை வழங்கியுள்ளார். இதனால் கோபமடைந்த மாணவர் மற்றுமொரு மாணவனுடன் இணைந்து, குறித்த மாணவர் அதிபரின் நாற்காலிக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் கணினி ஆய்வகத்தில் இருந்த இருபதிற்கும் மேற்பட்ட கணினிகள், துணைக்கருவிகள், மின்விசிறிகள், ஏராளமான பாடப்புத்தகங்கள், அதிபரின் நாற்காலி மற்றும் பல கோப்பைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
8 மற்றும் 12 வயதுடைய மாணவர்களே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து 
தெரியவருகையில்,
மாணவர் ஒருவர் அணிந்து வந்த கையுறை தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிபர் தண்டனை வழங்கியுள்ளார். இதனால் கோபமடைந்த மாணவர் மற்றுமொரு மாணவனுடன் இணைந்து, குறித்த மாணவர் அதிபரின் நாற்காலிக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 5.00 மணியளவில் பாடசாலை ஒன்றில் தீ பரவியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பாணந்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தீ விபத்தில் கணினி ஆய்வகத்தில் இருந்த இருபதிற்கும் மேற்பட்ட கணினிகள், துணைக்கருவிகள், மின்விசிறிகள், ஏராளமான பாடப்புத்தகங்கள், அதிபரின் நாற்காலி மற்றும் பல கோப்பைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக 
பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர்கள் இருவரும் அதிபரின் அறையில் இருந்த சாவியை எடுத்து ஏனைய வகுப்பறைகளை திறந்து உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார்
 கூறியுள்ளனர்.   

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 3 மே, 2022

மிரிஹானையில் பழுதுபார்ப்பதற்காக நிறுத்திவைக்கப்பட்ட காரொன்றை கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது

பழுதுபார்ப்பதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 40 இலட்சம் பெறுமதியுடைய காரொன்றை கொள்ளையிட்ட சந்தேகநபரொருவர் மிரிஹானை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மிரிஹானை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு 
தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 42 வயதான மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேகநபரை விசாரணைக்குட்படுத்தியதில் அவரால் கொள்ளையிடப்பட்ட கார் மாளிகாவத்தை பகுதியில் 
கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்தநபர் நேற்று நுகேகொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவரை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு 
உத்தரவிடப்பட்டது.
மேலதிக விசாரணைகளை மிரிஹானை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் 
தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 2 மே, 2022

நாட்டில் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டு, எரிபொருள் இறக்கும் பணிகள்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தகவலின்படி 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் கச்சா எண்ணெய் தாங்கி ஏற்றிவந்த கப்பல்களை அகற்றுவதற்கு டொலர்கள் பற்றாக்குறையால் பெரும் காலதாமதத்தைச் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
டீசல் ஏற்றிச் வந்த கப்பலும், ஒக்டேன் 95 பெற்றோலை ஏற்றி வந்த இரண்டு கப்பல்களும் மார்ச் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இலங்கையை 
வந்தடைந்தன.
எனினும், அவற்றைத் இறக்க முடியாத காரணத்தினால்01-05-2022. அன்று  நிலவரப்படி மேலும் 422 மில்லியன் ரூபா தாமதக் கட்டணமாகச் செலுத்த 
வேண்டியிருந்தது.
எனினும், டீசலை இறக்குவதற்கு தேவையான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டு, இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
70,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயை ஏற்றிச் வந்த கப்பலுக்குச் செலுத்த வேண்டிய 70 மில்லியன் டொலர்களைக் கண்டுபிடிக்க முடியாததால், அந்த கப்பலை வெளியேற்றும் பணி முடங்கியுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 1 மே, 2022

இலங்கையில் இன்றையதினம் இடம்பெறவுள்ள மே தின ஆர்ப்பாட்டங்கள் காரணமாக

இன்றையதினம்.01-05-2022. இடம்பெறவுள்ள மே தின ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கொழும்பில் விசேட போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று  நடைபெறவுள்ள மே தின ஆர்ப்பாட்டங்களுக்கு 
பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் 
வீதி பாதுகாப்பை 
வழங்குவதுடன் போக்குவரத்தை வழமையாக பேணுவதற்கும் பொலிஸார் ஏற்கனவே ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு 
தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் நுகேகொடையில் நடைபயணங்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களில்  நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





Blogger இயக்குவது.