வெள்ளி, 2 அக்டோபர், 2026

எதிர்வரும் ஆறாம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 8ஆம் திகதி வியாழக்கிழமை வரையான மூன்று நாட்களும், ஒன்பது அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 5ஆவது வேந்தர் தகைசால் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் பட்டமளிப்பு விழாவைத் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும்
 வழங்கிக் கௌரவிப்பார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், கலைப்பீடம், விஞ்ஞானபீடம், விவசாயபீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், தொழில்நுட்பப் பீடம், பொறியியற்பீடம், மருத்துவ பீடம், இந்துக்கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தைச் சேர்ந்த 
வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகிய 14 பீடங்களையும் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்களும், தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் 314 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 680 உள்வாரி மாணவர்களுக்கும், 417 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவிருப்பதுடன், 10 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் 24 தொழில்சார் ஆங்கிலத்தில் தகமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.