யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் தொடர்ச்சியாக கட்டப்பட்டு வருவதாக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் , தையிட்டி விகாரைக்காக அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் தெரிவித்துள்ளார்
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதியில் புதிய கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்படுவதாக எனக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு அது தொடர்பில் தெரியப்படுத்தினேன்.
அதனை அடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த எமது சக உறுப்பினர்கள் மூவருமாக நாம் விகாரை அமைந்துள்ள
பகுதிக்கு சென்றோம்.
அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் எம்மை விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் செல்ல
அனுமதிக்கவில்லை
இந்த அரசாங்கம் மக்களின் காணி மக்களுக்கு என கூறி வருகின்றனர். புதிய அரசாங்கம் வந்து இரண்டு வருடங்கள் கடந்தும் காணிகள் விடுவிக்கப்படவில்லை.
விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்போம் என்றவர்கள் விடுவிக்கவில்லை. ஆனால் தற்போதும் விகாரை அமைந்துள்ள காணிகளுக்குள் தொடர்ச்சியாக சட்டவிரோத கட்டுமானங்கள் இடம்பெற்று வருகின்றன
காணிகளை விடுவிப்போம் என கூறி வரும் அரசாங்கம் சட்டவிரோத கட்டுமான பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கோருகிறோம் என தெரிவித்தார். என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக