இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள ‘அரசைப் பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் புதிய சட்ட மூலத்தை’ உடனடியாக மீளப்பெற்று நீக்க வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் புதிய பயங்கரவாதச் சட்டமும் வேண்டாம், பழைய பயங்கரவாதத் தடைச் சட்டமும் வேண்டாம்" என தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
போராட்டத்தின் நிறைவில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்ட மூலத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரின் விபரங்கள் பகிரங்கமாக
வெளியிட்;டப்பட்டன.
அரசாங்கம் கொண்டுவர முனையும் இப்புதிய சட்ட மூலமானது ஜனநாயக உரிமைகளையும் மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் ஒடுக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் இலங்கை முழுவதிலும் எழுப்பப்படுவதுயாழில் புதிய சட்ட மூலம் வேண்டாம்: என போராட்டம்
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக