செவ்வாய், 20 அக்டோபர், 2026

நாட்டில் தடையின்றி முன்னெடுக்கப்படும் லிட்ரோ எரிவாயு விநியோகம்

லிட்ரோ எரிவாயு நாடு முழுவதும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு விநியோகம் விரைவுபடுத்தப்பட்டு மிகவும் சீரான முறையில் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம்
 தெரிவித்துள்ளது
சுமார் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏந்திய 'பிரான்சுவா' (Francois) என்ற கப்பல் கடந்த அக்டோபர் 18 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும், அதில் உள்ள எரிவாயுவைக் இறக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, மேலும் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவைச் சுமந்தபடியே நான்காவது கப்பலான 'கொரிந்தியன்' (Corinthian) வரும் அக்டோபர் 22 ஆம் திகதி நாட்டை வந்தடைய அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தொடர்ச்சியான எரிவாயுக் கப்பல்களின் வருகையானது நாடு முழுவதும் விநியோகத்தை ஸ்திரப்படுத்தவும், எவ்வித தடையோ அல்லது தட்டுப்பாடோ இன்றி சந்தைக்குத் தடையற்ற முறையில் எரிவாயுவை விநியோகிப்பதை உறுதிசெய்யவும் உதவும் என லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.