சனி, 10 அக்டோபர், 2026

யாழ் கைதடி வீதியில் முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு

 இன்று முதல் பெண் மாவீரரான மாலதி என அழைக்கப்படும் சகாயசீலி பேதுருப்பிள்ளையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு -10-10-2026-இன்றைய தினம் சனிக்கிழமை யாழ், கோப்பாய் – கைதடி வீதியில் அவர் வீரச்சாவடைந்த இடத்தில் இடம்பெற்றது.
போராளி நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில், மாவீரர் ஒருவரின் தாயாரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மாலதியின் நினைவாக மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது
இலங்கைத் தமிழர் ஆயுதப் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரராக அடையாளப்படுத்தப்படும் மாலதி, 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 
உயிரிழந்தார்.
அவரது நினைவாக ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.