.ரொக்கெட் உந்துவிசைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குறுகிய தூரம் பறக்கும் திறன் கொண்ட புதிய டெஸ்லா ரோட்ஸ்டர் ஸ்போர்ட்ஸ் காரை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். இக்கார் 2028-ஆம் ஆண்டு உற்பத்திக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
டெக்சாஸின் வேக்கோவில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில், குளிர் வாயு உந்துவிசைக் கருவிகள் பொருத்தப்பட்ட ரோட்ஸ்டர் கார், டெஸ்லாவின் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது பக்கவாட்டுச் சுழற்சி செய்து தனது திறனை வெளிப்படுத்தியது. மேலும், காரின் வேகம் மற்றும் சாலைப் பிடிப்பை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களும்
காட்சிப்படுத்தப்பட்டன.
இந்தக் காரின் ரொக்கெட் உந்துவிசைப் பதிப்பை முன்பதிவு செய்ய மொத்தம் 2,50,000 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும்.
இதில் முதற்கட்டமாக 5,000 டாலர் வைப்புத்தொகையும், பத்து நாட்களுக்குள் கூடுதலாக 2,45,000 டாலரும் செலுத்த வேண்டியுள்ளது.
உந்துவிசைக் கருவிகள் இல்லாத செயல்திறன் பதிப்பை முன்பதிவு செய்ய 50,000 டாலர் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
. என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக