சனி, 17 அக்டோபர், 2026

நாகையில் இருந்து இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருளை கடத்த முற்பட்ட வர் கைது

நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 135 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உட்பட 4 பேரை இந்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர் 
நாகையில் இருந்து இலங்கைக்கு சர்வதேச போதைப்பொருளான மெத்தம்பெட்டமைன் கடத்தப்படுவதாக இந்திய மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வேளை வேளாங்கண்ணி அருகே கீழப்பிடாகை சிந்தாமணி மெயின் ரோட்டைச் சேர்ந்த நாகை மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான பூபாலன் (42) என்பவர் மூளையாகவும், பின்புலமாகவும் இருப்பது
 தெரியவந்தது.
இதையடுத்து, 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் பூபாலன் வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கடத்தல் சம்பவத்தில் பூபாலனின் சகோதரர் உள்ளிட்ட இருவருக்கு  தொடர்பு இருப்பது முதல் கட்ட விசாரணையில் 
தெரியவந்தது.
பூபாலன் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், இதை பூபாலன் தனக்குச் சாதகமாக பயன்படுத்தி, இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு நண்பர்கள் மூலம் போதைப் பொருட்களை கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் 100 கோடி முதல் 135 கோடி இந்திய ரூபாய் வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேவேளை, கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவர், கடந்த வாரம் வேதாரண்யம் விடுதியில் தங்கி இருந்தார் எனவும், அவர் கோடியக்கரையில் ஒரு மீனவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து
 படகையும், அதற்கு காரைக்காலில் இருந்து 1 லட்சம் 
ரூபாய் மதிப்பிலான அதிவேக இயந்திரத்தையும் வாங்கிச் சென்றது குறித்து அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் 
தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், புலனாய்வு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அந்த நபரை கைது செய்து விசாரித்துள்ளனர். கனடா நாட்டைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான அவரிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பூபாலனை கட்சியை விட்டு நீக்கி தவெக நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.