புதன், 21 அக்டோபர், 2026

இந்திய அமைதிப்படையால் படுகொலைகள் யாழ். போதனா வைத்தியசாலை நினைவேந்தல்

இந்திய அமைதிப்படை யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலையில்  
அனுஸ்டிக்கப்பட்டது. 
கடந்த 1987 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் மற்றும் 22ஆம், திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி உள் நுழைந்த இந்திய அமைதிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் 
மேற்கொண்டனர். 
அத்தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 
அன்றைய தினங்களில் வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. 
அதன் போது, படுகொலை செய்யப்பட்ட வைத்தியர்கள் , தாதியர்கள் உள்ளிட்ட வைத்திய சாலை பணியாளர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து ,  சுடரேற்றி , மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.