புதன், 21 அக்டோபர், 2026

நாட்டில் சிற்றுண்டிகளின் விலையும் இன்று நள்ளிரவு முதல்அதிகரிப்பு

நாட்டில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொ டர்ந்து, பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட மாப்பொருள் சார்ந்த சிற்றுண்டி வகைகளின் விலைகளை இன்று (21) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது
அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோதுமை மா இறக்குமதியாளர்களினால் மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனையடுத்தே, உணவக உரிமையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த உடனடி விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் பராட்டா, முட்டை ரொட்டி மற்றும் மாப்பொருள் சார்ந்த ஏனைய சிற்றுண்டிகளின் (Short eats) சில்லறை விலையில் 5 ரூபா உயர்த்தப்படவுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.