நாட்டில் கிளிநொச்சியில் வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்
இராமநாதபுரம் மற்றும் அக்கராஜன் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பகலில் வீட்டில் ஆட்கள் அற்ற நிலையில் பூட்டியிருக்கும் வீடுகளை குறி வைத்து அண்மைக்காலமாக கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன
இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், பெண்ணொருவரையும் , அவரது மகனையும் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொள்ளையடிக்கப்பட்ட 21 அரை பவுண் தங்க நகைகள் மற்றும் 10 இலட்ச ரூபாய் பணம் என்பவற்றை பொலிஸார்
மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் காவலில் வைத்து போலீசார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக