யாழ் மாதகல் குசுமன்துறை கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சுமார் ஒன்றரை பில்லியன் ரூபாய் பெறுமதியான பெருந்தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட்நடவடிக்கை குறித்து நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர என்பவர் அத்தகைய விபரங்களை
வெளியிட்டுள்ளார்
கடற்படையினரால் மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த நிறை சுமார் 81 கிலோகிராம் ஆகும்.
இதில் சுமார் 35 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 46 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் உள்ளடங்கியுள்ளன.
அண்மைய காலங்களில் வடபகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவென பிரதி அமைச்சர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையின் பல குழுக்கள் ஒன்றிணைந்து முற்றுகையை வெற்றிகரமாக முன்னெடுத்ததாக இலங்கை கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் சுமார் 75 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 56 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.htm
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக