தொடரும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மின் கேபிள்கள், செப்பு கம்பிகள், வீதி மின்விளக்குக் கம்பங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் திருடப்பட்ட 100 சம்பவங்கள் 2021 முதல் 2023 வரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ளதாக 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, பதிவான 100 திருட்டுச் சம்பவங்களில் 11 சம்பவங்களுக்கான இழப்பு ரூ.580 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய 89 சம்பவங்களின் பெறுமதி இதுவரை கண்டறியப்படவில்லை என
குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதிவேக நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் கேபிள்கள் முழுமையான கொன்கிரீட் பாதுகாப்பின்றி அமைக்கப்பட்டிருந்ததால், அவற்றை இலகுவாக வெட்டி அகற்றக்கூடிய நிலை காணப்பட்டதாக கணக்காய்வு அறிக்கை
சுட்டிக்காட்டியுள்ளது.
முதல் திருட்டுச் சம்பவம் பதிவான 2021ஆம் ஆண்டிலிருந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததாலும், பொறுப்பான அதிகாரிகளால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததாலும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்ததாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
இதனிடையே, அதிவேக நெடுஞ்சாலையின் முழுமையான சேதங்களை சீரமைப்பதற்கான செலவு ரூ.1,770 மில்லியனைத் தாண்டும் எனவும் கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
எனினும், இந்தத் திருட்டுகள் மற்றும் சேதங்களுக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக