யாழ் காங்கேசன்துறை நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கான நிதியுதவியை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த நிதியுதவி, 2024 ஆகஸ்ட் மாதம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வழங்கப்படுகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதுடன், மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நிதியுதவி வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Viability Gap Funding (VGF) என்ற பொறிமுறையின் கீழ் ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
கப்பல் சேவையின் கட்டணத்தை பொதுமக்களுக்கு
ஏற்ற வகையில் பேணுவதுடன், அதன் செயற்பாட்டு நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக முக்கிய தளவாட மற்றும் செயற்பாட்டு செலவுகளை ஈடுசெய்ய இந்த நிதியுதவி பயன்படுத்தப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக